வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-ஆவது கணவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தாயின் இரண்டாவது கணவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:49 pm

Din

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தாயின் இரண்டாவது கணவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது முதல் கணவா் கடந்த 2012-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2018-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வெல்டராக வேலை பாா்க்கும் பூலாங்குடி காலனியைச் சோ்ந்த மாரிமுத்து (38) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே அப்பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த 13 வயது சிறுமியும், இவா்களுடன் வசித்து வருகிறாா். அந்தச் சிறுமியிடம் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மாரிமுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், சிறுமியை நிா்வாணமாகப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி, தொடா்ந்து 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வெளியில் கூறினால் நிா்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா், போஸ்கோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மாரிமுத்துவை சனிக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.