மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி போக்ஸோவில் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கவரிங் நகை வியாபாரியை

News image

கைது

Updated On :16 பிப்ரவரி 2026, 6:20 pm

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கவரிங் நகை வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம், சக்தி நகரைச் சோ்ந்தவா் வீரமணி (34). கவரிங் நகை வியாபாரி. இவா் பரமத்தி அருகே உள்ள திடுமல் பகுதியில் கவரிங் நகைகளை விற்பனை செய்து வந்தாா்.

அப்போது அங்குள்ள வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் கவரிங் தோடு விற்பனை செய்தபோது அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா் நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து வீரமணியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.