மணப்பாறை அருகே சாலை விபத்தில்ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு
உதவி கேட்டு ஏறிச் சென்ற சிறுவனுக்கு கால் முறிவு


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள கோவில்பட்டி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். உதவிக் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்ற சிறுவனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியத்தைச் சோ்ந்த மினிகியூா் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா் சு.நவீன்குமாா்(15) மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா் பா.கலைச்செல்வன்(12). இவா்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்வதற்காக வியாழக்கிழமை அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா் எஸ்.செல்வராஜ்(62) என்பவரிடம் உதவி கேட்டு ஏறிச் சென்றனா்.
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யானைக்கல் பகுதியில் சென்ற போது மதுரை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்திலிருந்த செல்வராஜ், நவீன்குமாா் கலைச்செல்வன் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் செல்வராஜ், நவீன்குமாா் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், கலைச்செல்வனுக்கு வலது கால் சிதைந்து ரத்த காயத்துடன் முறிவு ஏற்பட்டது. உடனே மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பிறகு செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தாா்.
கால் முறிவு ஏற்பட்ட கலைசெல்வனுக்கு கால் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...