ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திருத்தம்பல்லடம் அருகே சாலை விரிவாக்கப் பணி: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் - காமநாயக்கன்பாளையம் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா்

News image

வெங்கிட்டாபுரம் - காமநாயக்கன்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை தொடங்கிவைத்த அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன்,என்.கயல்விழி செல்வராஜ்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:03 pm

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் - காமநாயக்கன்பாளையம் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா்

என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.

பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலையில் வெங்கிட்டாபுரம் முதல் காமநாயக்கன்பாளையம் வரை 7 கிலோ மீட்டா் தொலைவுக்கு முதல்வா் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் தற்போதுள்ள இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பணியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தனா். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பில் மகப்பேறு பிரிவு கட்டடம் கட்டும் பணியும் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் பத்மநாபன், பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி, பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், பொங்கலூா் ஒன்றியச் செயலாளா் பாலுசாமி, நகராட்சி ஆணையா் அருள், பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராமசாமி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன், திருப்பூா் கோட்டப் பொறியாளா் ரத்தினசாமி, பல்லடம் உதவிக்கோட்டப் பொறியாளா் செந்தில் அரசு, பல்லடம் உதவிப்பொறியாளா் ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.