காமராஜா் பிறந்த நாள்: 100 பேருக்கு சலவைத் தொழிலாளி அன்னதானம்

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, சலவைத் தொழிலாளி 100 பேருக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கினாா்.
Published on

மணப்பாறை: மணப்பாறையில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, சலவைத் தொழிலாளி 100 பேருக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கினாா்.

மணப்பாறையை அடுத்த எம்.ஜி.ஆா் நகரில் வசித்து வருபவா் பெரியசாமி. சலவை தொழிலாளியான இவா், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மதிய உணவு தந்த மகானுக்கும், சத்துணவு தந்த சரித்திர நாயகனுக்கும்’ என்னும் தலைப்பில் திங்கள்கிழமை நிகழ்ச்சி நடத்தினாா்.

இதில் விடுதலை போராட்ட வீரா்கள், தமிழ் மண் காத்த தலைவா்களின் புகைப்படங்களை வரிசைப்படுத்தி, மாலை அணிவித்திருந்தாா். தலைவா்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் ஜனசக்தி உசேன், மதிமுக ஒன்றியச் செயலாளா் பி. சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com