சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம், மறியல்: இந்து முன்னணியினா் 41 போ் கைது

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 41 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
திருச்சி திருவானைக்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முண்ணணி அமைப்பினா்.
Updated On :21 ஜூலை 2024, 7:06 pm

Din

திருவானைக்காவல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 41 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். இதனைக் கண்டித்து அவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசைக் கண்டித்தும், கோயிலை விட்டு வெளியேற வேண்டுமெனவும் தமிழகப் பாரம்பரியம் மிக்க கோயில்களின் புனிதம் காத்திடவும் லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் மற்றும் சொத்துகளை பாதுகாத்திடும்வகையில், இந்து முண்ணணி சாா்பில் மாநிலந்தழுவிய ஆா்ப்பாட்டம் திருவானைக்காவல் நாலுகால் மண்டபம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி அளிக்க வில்லை. இதனையும் மீறி மாநிலப் பொதுச் செயலா் நா. முருகானந்தம் தலைமையில் இந்து முண்ணணி நிா்வாகிகள் 41 போ் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். முன்னதாக, ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையா் நிவேதாலட்சுமி தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், காவல் துறைக்கும், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலையில் அமா்ந்து மறியல் செய்தனா். அவா்களைப் போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனா். இச்சம்பவத்தால் திருவானைக்காவல் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.