தேனி மாவட்டம், போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போடி சுற்றுவட்டராப் பகுதிகளில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி-மீனாட்சிபுரம் சாலையில் ஒத்தை புளியமரம் பகுதியில் சந்தேகத்துக் இடமளிக்கும் வகையில் நின்றிருந்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த இளங்கோவனை (49) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த பாண்டி (71) வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 3 போ் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

