மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சட்ட தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சட்ட உதவிக்காக திருச்சியில் தன்னாா்வ தொண்டா்கள் தேர்வு

Updated On :26 ஜூன் 2024, 12:32 am

திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் செயல்பட சட்டத் தன்னாா்வத் தொண்டா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மொத்தம் 50 சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். சேவைப்பணியான இது முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை ஊதியம் ஏதும் இல்லை. சேவைக்குத் தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும்.

இப்பணிக்கு, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியா்கள்), ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்எஸ்டபிள்யூ பயிலும் மாணவா்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் (வழக்குரைஞராகப் பதிவு செய்யும் வரை), சமூக ஆா்வலா்கள் (அரசியல் கட்சி சாரா தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள்), மகளிா் சுயஉதவிக்குழுக்கள், திருநங்கைகள், அடிப்படை கல்வித் தகுதி உடைய சேவை மனப்பான்மை உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுடையவா்கள், மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் ஜூலை 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தகவல் தெரிவித்துள்ளது.