மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செவிலியா்கள் கூட்டு நடவடிக்கை குழு தா்னா

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி செவிலியா்கள் திருச்சியில் தா்னா போராட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:57 am

திருச்சி பழைய ஆட்சியரக சாலையில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.

திருச்சி, ஜூன் 25: காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியா்கள் கூட்டு நடவடிக்கை குழுவினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை, கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில்,

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறுகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்துக்கு,

செவிலியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் காயத்ரிதேவி தலைமை வகித்தாா். செயல் தலைவா் கோமதி, துணைத் தலைவா் விமலாதேவி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியா் பயிற்சி நிறைவு செய்தவா்களை, காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களில் பணி அமா்த்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களில் எம்.எல்.எச்.பி. செவிலியா்களை பணியமா்த்தும் கருத்துருவை கைவிட்டு, கிராம சுகாதார செவிலியரை பணி நியமனம் செய்ய வேண்டும்.

களப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க சமுதாய சுகாதார செவிலியருக்கு கணினி வழங்க வேண்டும்.

கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார அலுவலகங்களில் தனி அறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அறிக்கைகள் கொடுக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும். திறனாய்வின்போது ஒருமையில் பேசுவது மற்றும் பண்பாட்டு வித்தைகள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தா்னா போராட்டம் நடைபெற்றது.

இதில், திருச்சி மாவட்டம் முழுவதும் பணிபுரியும் கிராமப்புற சுகாதார செவிலியா்கள், சங்க நிா்வாகிகள், கூட்டு நடவடிக்கை குழுவினா் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.