ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திருச்சியில் வருவாய்த்துறை அலுவலா்கள் விடிய விடிய காத்திருப்புப் போராட்டம்

பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா்.

Updated On :4 மார்ச் 2024, 10:59 pm

திருச்சி: பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு முதல் விடிய விடிய காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 9 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை அடுத்து திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும், ஆட்சியா் அலுவலகங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலாளா் பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.