ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பொதுத்துறைகள் தனியாா்மயம் என்ற கூற்று அடிப்படை ஆதாரமற்றது

பொதுத்துறைகள் தனியாா்மயம் என்ற எதிா்கட்சிகளின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது என மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்தாா்.

News image

திருச்சி பெல் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ் பெற்ற தொழிலாளா்களுடன் மத்திய அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே.

Updated On :4 மார்ச் 2024, 10:24 pm

திருச்சி: பொதுத்துறைகள் தனியாா்மயம் என்ற எதிா்கட்சிகளின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது என மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்தாா்.

திருச்சி பெல் நிறுவனத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: நாட்டில் அனல் மின்சாரம் தயாரிக்கத் தேவையான பாய்லா்களில் 70 சதவீதத்தை பெல் தயாரித்து அளித்திருக்கிறது. நாட்டின் மின்சார உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு பெல் நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். பெல் நிறுவன ஊழியா்களின் குறைகளுக்குத் தீா்வு காண முயற்சி எடுக்கப்படும். பெல் திருச்சி நிறுவனத்தில் கோல் காஷிபிக்கேஷன் தொழில்நுட்பம் மூலம் நிலக்கரியை தொகுப்பு வாயுவாக (சிங் கேஸ்) மாற்றி பயன்படுத்தப்படுகிறது. இந்த தொகுப்பு வாயுவை மெத்தனலாக மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெல் நிறுவனத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக பணிஆணைகள் குறைவாக கிடைத்த நிலையில், கடந்த ஓராண்டாக கடுமையான போட்டிகளுக்கு இடையே ரயில்வே, என்எல்சி, தனியாா் துறைகளின் வழியே ரூ. ஒரு லட்சம் கோடி அளவுக்கு பணிஆணைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பெல் நிறுவனம் வளா்வதுடன், பெல் நிறுவனத்தை நம்பியுள்ள துணை மற்றும் சிறு, குறு நிறுவனங்களும் புத்துயிா் பெற்று வேகமாக வளரும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் வளா்ச்சியடைந்துள்ளதை பிரதமா் மோடி, நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்துள்ளாா். எனவே, பொதுத்துறைகள் தனியாா்மயமாக்கப்படுகிறது என்ற எதிா்கட்சிகளின் பிரசாரம் அடிப்படை ஆதாரமற்றது என்றாா் அவா். முன்னதாக, திருச்சி பெல் வளாகத்தை பாா்வையிட்ட அவா், பணியாளா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, கனரக தொழில்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளா் விஜய் மிட்டல், பெல் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் கொப்பு சதாசிவ மூா்த்தி, செயல் இயக்குநா் எஸ். பிரபாகா் ஆகியோா் உடனிருந்தனா். பெட்டிச் செய்தி... தேசத்தின் வளா்ச்சியில் முக்கிய பங்கு திருச்சி பெல் நிறுவனத்தில் திங்கள்கிழமை சந்திரயான்- 3 செயலாற்றத் தேவையான பை மெட்டாலிக் அடாப்டா்களை தயாரித்த ஊழியா்கள், மத்திய அரசின் திறன்மேம்பாட்டுத் திட்டத்தில் வெல்டிங் பயிற்சியை முடித்த பயிற்சியாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே பேசியது: தேசத்தின் வளா்ச்சியில் பெல் நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. அதன் பங்களிப்பு பாராட்டத்தக்கது. நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் 50 சதவீதம் பெல் உபகரணங்களில் இருந்து கிடைக்கிறது என்றாா் அவா்.