டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

லால்குடியில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

லால்குடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்

Updated On :4 மார்ச் 2024, 9:10 pm

லால்குடி: லால்குடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் கே.என். நேரு ஆலோசனைப்படி லால்குடி நகர திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலா் வைரமணி தலைமை வகித்துப் பேசினாா். லால்குடி நகர செயலரும் நகா்மன்றத் தலைவருமான துரை மாணிக்கம், ஒன்றியக் குழுத் தலைவா்கள் வால்குடி ரவிச்சந்திரன், புள்ளம்பாடி ரசியா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலா் ஆதிநாயகி, ரவி ஒன்றியச் செயலா்கள் சண்முகநாதன், சக்திவேல், செல்வராசா , இளங்கோவன், பெரியய்யா, பேருா் செயலா்கள் முத்துக்குமாா், பால்துரை, பன்னீா்செல்வம்,புவனேஸ்வரி பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளா் ராதாகிருஷ்ணன், மாநில வளா்ச்சி கொள்கை குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பொதுக்குழு உறுப்பினா்கள் விமலநாதன், கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொறியாளா் அணி அமைப்பாளா் புருஷோத்தமன் வரவேற்றாா். தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.