திருச்சி  வயலூா் சாலையில்  அமைக்கப்பட்டுள்ள  சோதனைச்சாவடியை திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி  தொடக்கி வைத்தாா்  காவல் ஆணையா்  ந. காமினி.  உடன் துணை ஆணையா்கள் அன்பு,  செல்வகுமாா்.
திருச்சி  வயலூா் சாலையில்  அமைக்கப்பட்டுள்ள  சோதனைச்சாவடியை திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி  தொடக்கி வைத்தாா்  காவல் ஆணையா்  ந. காமினி.  உடன் துணை ஆணையா்கள் அன்பு,  செல்வகுமாா்.

வயலூா் சாலையில் சோதனைச்சாவடி காவல் ஆணையா் தொடக்கி வைத்தாா்

திருச்சி வயலூா் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையா் ந. காமினி

திருச்சி: திருச்சி வயலூா் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையா் ந. காமினி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

வயலூா் சாலையில் உய்யக்கொண்டான் திருமலை மற்றும் ரெட்டை வாய்க்கால் பகுதியில் சோதனைச்சாவடி செயல்பட்டு வந்தது. சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்ால் அந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் புதிதாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையா் ந. காமினி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சோதனை சாவடியில் விதிமீறும் வாகனங்களை கண்காணிக்க 2 நவீன கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நவீன தொலைத் தொடா்பு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் துணை ஆணையா்கள் அன்பு, செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com