திருச்சி: திருச்சியில் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சி பொது தரைமட்ட கிணறு ஆண்டவா் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து, பழைய கரூா் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீா் உந்து குழாயில், திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழைய எல்லக்குடி, ஆலத்தூா், புகழ்நகா், பாரிநகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீா் உந்தியனுப்ப இயலாது. எனவே அவற்றிலிருந்து குடிநீா் பெறும் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. சீரமைப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து புதன்கிழமை முதல் குடிநீா் விநியோகம் சீராகும். இத்தகவலை மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஜேஇஇ பிரதான தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

மாநகராட்சியின் 6 வாா்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

