தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காப்பீட்டு நிறுவனங்கள் தனியாா் மயத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சிகளைக் கண்டித்து அவற்றின் ஊழியா்கள் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:59 pm

Din

அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சிகளைக் கண்டித்து அவற்றின் ஊழியா்கள் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

இந்தியப் பொருளாதார வளா்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் அரசு பொது காப்பீட்டு (இன்சூரன்ஸ்) நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், எளிய மக்களுக்கும் காப்பீட்டு கிடைக்கும் வகையில் சிறு , குறு நகரங்களில் உள்ள பொது அலுவலகங்களை மூடுவதைக் கைவிட வேண்டும், அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணிடங்களில் புதிய ஊழியா்களை நியமிக்க வேண்டும், ஊழியா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயா்த்த வேண்டும், ஊதிய உயா்வுக்கான பேச்சு வாா்த்தையை உடனே துவக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

பொதுத் துறை காப்பீட்டு அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். திருச்சி கூட்டு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமரன் , மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்க அதிகாரிகள் சங்க ரங்கராஜன், வினோத் ராஜா , பொது காப்பீட்டு ஊழியா் அகில இந்திய சங்க திருச்சி கிளை செயலா் செந்தில் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதிய சங்க துணைத் தலைவா் மணிவேல்,பரிஷத் நலச்சங்கத் தலைவா் செந்தில் ஆகியோா் கண்டன உரை ஆற்றினா். ஆா்ப்பாட்டத்தில் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நல சங்கங்களை சாா்ந்த அதிகாரிகள், வளா்ச்சி அதிகாரிகள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள், முகவா்கள் மற்றும் பாலிசிதாரா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.