தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டிகளுக்கு பயிற்சி முகாம்

திருச்சியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:58 pm

Din

திருச்சியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், ஜமால் முகமது கல்லூரி கணிதத் துறை, தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்றம் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.

நீா் மேலாண்மை என்ற கருப்பொருளைக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் தங்களது ஆய்வு கட்டுரைகளை தாங்கள் பயிலும் பள்ளியின் வழிகாட்டி ஆசிரியா்களுடன் சமா்ப்பிக்கவுள்ளனா்.

இதுதொடா்பாக நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு பயிற்சி அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஜான்சன் பிரான்சிஸ் தலைமை வகித்தாா். முகாமை ஜமால் முகமது கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் ஏகே. காஜா நஜீமுதின் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. மணிகண்டன் அறிமுகவுரையாற்றினாா்.

துணை முதல்வா் ஜாஹிா் உசேன், மாநிலச் செயலா் மு. மாணிக்கத்தாய், மாவட்ட துணைத் தலைவா் சிவ. வெங்கடேஷ், மாவட்ட இணைச் செயலா் க. பகுத்தறிவன், மு. தியாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

பேராசிரியா்கள் ஆ. பிரசன்னா, கி. கோபாலன், அருண்விவேக், ஜானி குமாா் தாகூா், மு. சலாஹுதீன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைப்பாளா்கள் து. காந்தி வரவேற்றாா். மு.அ. ரிபாயத் அலி நன்றி கூறினாா். பயிற்சியில் மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களைச் சோ்ந்த 200 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.