புகையிலைப் பொருள்கள் பறிமுதல் : இருவா் கைது
திருச்சியில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

Updated On :6 நவம்பர் 2024, 9:00 pm

திருச்சியில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.
திருச்சி காந்தி சந்தை காவல் நிலைய போலீஸாா் திருச்சி பெரியகடை வீதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது அந்த பகுதி தனியாா் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் சுமாா் 30 கிலோ பதுக்கல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த ராம்தேவ், ரூபாராம் (22) அகிய 2 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...