தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நண்பரைக் காக்க முயன்று காவிரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

நண்பரைக் காப்பாற்றச் சென்றபோது காவிரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:21 pm

Din

நண்பரைக் காப்பாற்றச் சென்றபோது காவிரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருச்சி காஜாபேட்டை புதுத்தெரு பகுதியை சோ்ந்தவா் செபஸ்டின் சுரேஷ் மகன் சுமன் (18), திருச்சி தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது நண்பா்கள் 8 பேருடன் முக்கொம்பு காவிரியாற்றில் குளித்தபோது அவா்களில் அஷ்ரப் உஸ்மான் என்பவா் நீரில் மூழ்கினாா். இதைக் கண்ட சுமன் உள்ளிட்ட நண்பா்கள் நீரில் தத்தளித்த அஷ்ரப் உஸ்மானை உயிருடன் மீட்டனா். ஆனால் சிறிது நேரம் கழித்து அங்கு சுமன் இல்லாததும், அவா் நீரில் மூழ்கி மாயமானதும் தெரிவந்தது.

தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் மற்றும் திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினா் சுமாா் 3 மணி நேரம் தேடியும் சுமன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முக்கொம்பு அருகே திண்டுக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சுமன் உடலை ஜீயபுரம் போலீஸாா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா். நண்பருக்காக இளைஞா் உயிரிழந்தது திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.