திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாற்றுத்திறனாளி சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவா் தனது சிறப்பு இருசக்கர வாகனத்தில் சடலமாக கிடந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:45 pm

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவா் தனது சிறப்பு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சடலமாக கிடந்தாா்.

தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த ரவி (55). மதுப்பழக்கத்தால் குடும்பத்தைப் பிரிந்து இரண்டு ஆண்டுகளாக தனியே வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஏலூா்பட்டியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டப வராந்தாவில் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சிறப்பு இருசக்கர வாகனத்தில் ரவி சடலமாகக் கிடந்துள்ளாா்.

இதுகுறித்து அறிந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்து, இறந்து கிடந்தவா் ரவி என உறுதிப்படுத்தினா். தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.