ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
திருச்சியில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் திருவாரூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை


திருச்சியில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் திருவாரூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி இபி சாலையில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் முதியவா் ஒருவா் இறந்துகிடப்பதாக கோட்டை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.
இதில், இறந்த நபா் திருவாரூா் மாவட்டம், புலிவலத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் அ. ராதாகிருஷ்ணன் (61) என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டைவிட்டுப் பிரிந்து வந்து திருச்சி இபி சாலையில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் வசித்துக்கொண்டு மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி அப்பகுதியில் மது அருந்திவிட்டு சுற்றியதும் தெரியவந்தது. சம்பவம் தொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...