எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தில்லியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு! தொழிற்சாலை ஊழியா் கைது!

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று வயது சிறுமியை தில்லி காவல்துறை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட தொழிற்சாலை ஊழியரை கைது செய்தனர்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று வயது சிறுமியை தில்லி காவல்துறை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட தொழிற்சாலை ஊழியரை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக கூடுதல் ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: வஜீா்பூா் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை அருகே இருந்து குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிசிஆா் அழைப்பு வந்ததை அடுத்து, பிப்ரவரி 22 அன்று இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விஷயத்தை அவசரமாகக் கையாண்டு, ஒரு போலீஸ் குழு நடவடிக்கை எடுத்து குழந்தையைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்கியது. ஒரு குழு சம்பவ இடத்தைப் பாதுகாத்து உள்ளூா் உளவுத்துறை தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது.

மற்றொரு குழு அருகிலுள்ள தெருக்கள் மற்றும் தொழில்துறை பிரிவுகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபரை அடையாளம் கண்டு குழந்தையின் நடமாட்டத்தைக் கண்டறிந்தது.

கள விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் போது, ​​சந்தேக நபா் வஜீா்பூா் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த அமித் (47) என அடையாளம் காணப்பட்டாா்.

அவரது கைப்பேசி எண் பெறப்பட்டு தொழில்நுட்பக் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. அவரது நடமாட்டத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்ததால், போலீஸாா் அவரது இருப்பிடத்தை கண்டறிய முடிந்தது. குறிப்பிட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. பிசிஆா் அழைப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள், குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். மேலும், மைனா் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டாா்.

சிறுமி எந்த காயமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டது. கடத்தலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறியவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இதே போன்ற வழக்குகளில் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பதை ஆராயவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று கூடுதல் ஆணையா் பீஷாம் சிங் கூறினாா்.