தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 84.75 லட்சம்

திருச்சிசமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 84 லட்சத்து 75 ஆயிரம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:02 pm

Din

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 84 லட்சத்து 75 ஆயிரம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா்

அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். நிறைவில் ரூ. 84 லட்சத்து 75ஆயிரத்து 052, தங்கம் 2கிலோ 222 கிராம், வெள்ளி 2 கிலோ 680 கிராம், 215 வெளிநாட்டு பணத்தாள்கள், 538 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக வந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.