மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.24 கோடி

News image

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

Updated On :12 பிப்ரவரி 2026, 10:42 pm

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.24 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம்.சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் வியாழக்கிழமை உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா் .

இதில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,24, 37,775 ரொக்கம், 1 கிலோ 479 கிராம் தங்கம், 2 கிலோ 181 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 113, வெளிநாட்டு நாணயங்கள் 940-ம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு ஜன. 28-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.