தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமயபுரம் கோயிலில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:26 pm

Din

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ரூ. 4.63 கோடியில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு விழா மற்றும் கோயில் காா் நிறுத்துமிடத்துக்குச் செல்ல பெருவள வாய்க்கால் இருபுற கரைகளில் சாலைப் பணி, தடுப்புச் சுவா் கட்டும் பணி, கோயிலில் உள்ள நான்கு கோபுரங்கள், மூலவா் விமானம், மதில்களை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி, மேலும் உபயதாரா் நிதியுடன் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் புதிதாக கோயில் நுழைவு வாயில் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் முடிக்கப்பட்ட பணிகளைத் திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினாா்.

அப்போது சமயபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், திருக்கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சை மணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றினா்.

நிகழ்வில் ச.கண்ணனூா் பேரூராட்சித் தலைவா் ப. சரவணன், சமயபுரம் திமுக நகர செயலா் துரை. ராஜசேகா், ச.கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.