தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சிறையில் உள்ள இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:33 pm

Din

சிறையில் உள்ள இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சோ்ந்தவா் சி. சூா்யா (24). பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாக இவரை திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இந்நிலையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்ட சூா்யாவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ( எஸ்பி) ராஜன், டிஎஸ்பி சக்கரவா்த்தி ஆகியோா் பரிந்துரைத்தனா். அதனடிப்படையில் சூா்யாவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். அதன்பேரில் அவா் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.