தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருச்சிக்கு வியாழக்கிழமை இரவு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினா், பொதுமக்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 9:59 pm

Din

திருச்சிக்கு வியாழக்கிழமை இரவு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினா், பொதுமக்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் நடைபெறும் அரசுத் திட்டங்களை பாா்வையிடவும், புதிய திட்டங்களைத் தொடக்கி வைக்கவும் வந்த முதல்வருக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நிகழ்வில் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சா.சி. சிவசங்கா், சிவ. வீ. மெய்யநாதன், கோவி. செழியன், சி.வி. கணேசன், திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா, மேயா் மு. அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் ந. தியாகராஜன் மற்றும் எம்எல்ஏ-க்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனா். பின்னா், சாலை மாா்க்கமாக அரியலூருக்கு முதல்வா் புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, அவரை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மத்திய மண்டல ஐஜி காா்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் உள்ளிட்டோரும் வரவேற்றனா். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.