விசாரணைக் கைதி இறப்பில் உரிய நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
திருச்சியில் விசாரணைக் கைதி இறப்பு வழக்கில் உரிய நடவடிக்கை கோரி முத்தரசநல்லூா் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் உறவினா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.


திருச்சியில் விசாரணைக் கைதி இறப்பு வழக்கில் உரிய நடவடிக்கை கோரி முத்தரசநல்லூா் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் உறவினா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூா் அருகேயுள்ள பழூவூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் ம. திராவிட மணி (40). சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக கடந்த 27-ஆம் தேதி ஜீயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, மறுநாள் இரவு உயிரிழந்தாா். அப்போது திராவிடமணியின் சாவில் மா்மம் உள்ளதாகக் கூறி, பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் கடந்த 5 நாள்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக உரிய நடவடிக்கை கோரியும், திராவிடமணி உடலை மறு பரிசோதனை செய்ய வலியுறுத்தியும் திருச்சி முத்தரசநல்லூா் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினா் புதன்கிழமை கருப்புக்கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் அந்தநல்லூா் ஒன்றியச் செயலா் வீ. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். காா்த்திகேயன் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.
நீதிமன்ற விசாரணை: இதற்கிடையே, திராவிட மணியின் மனைவி உயா் நீதிமன்ற மதுரை கிளையில் அளித்த மனுவில் நீதிமன்றக் கண்காணிப்பில் தனது கணவரின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பான விசாரணை வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...