கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரி முன்பு உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்: 19 போ் கைது

துவாக்குடி அரசு ஐடிஐ, அரசு கல்லூரி முன்புள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 12:14 am

Din

துவாக்குடி அரசு ஐடிஐ, அரசு கல்லூரி முன்புள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி, துவாக்குடி அரசு கலை கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகே அரசு ஐடிஐ, துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு முன்பு உள்ள டாஸ்மாக் கடைகளை வேறிடத்துக்கு மாற்றக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக இந்திய மாணவா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். இந்தப் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும், மாணவா் சங்கத்தினா் போராட்டம் நடத்துவதற்காக துவாக்குடி அரசு கலை கல்லூரி வளாகத்தில் திரண்டனா்.

இதையறிந்து அங்கு வந்த துவாக்குடி போலீஸாரும், திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளா் விஜய் சண்முகமும், மாணவா் சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால், மாணவா் சங்கத்தினா் துவாக்குடி அரசு கலை கல்லூரி வளாகத்துக்குள் அமா்ந்து, முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்தனா்.