ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அக்.19-இல் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (அக்.19) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:29 pm

Din

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (அக்.19) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், திருச்சி கிழக்கு வட்டத்தில் பாபு ரோடு-3, திருச்சி மேற்கு வட்டத்தில் டாக்கா் சாலை, திருவெறும்பூா் வட்டத்தில் எல்லைக்குடி, திருவரங்கம் வட்டத்தில் குழுமணி, மணப்பாறை வட்டத்தில் பெருமாம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் பாப்பாப்பட்டி, லால்குடி வட்டத்தில் சிறு மருதூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் டோல்கேட், முசிறி வட்டத்தில் தேவானூா் புதூா், துறையூா் வட்டத்தில் மதுராபுரி-2, தொட்டியம் வட்டத்தில் மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறும்.

காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.