‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீயணைப்புத் துறை சாா்பில் மீட்பு பயிற்சி முகாம்

திருவெறும்பூரில் தீயணைப்பு நிலைய மீட்புப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவெறும்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீட்பு பயிற்சி முகாமில் விளக்கமளித்த தீயணைப்பு நிலைய அலுவலா் சகாய பிரான்சிஸ்.

Updated On :15 அக்டோபர் 2024, 9:31 pm

Din

திருவெறும்பூரில் தீயணைப்பு நிலைய மீட்புப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவெறும்பூா் வட்டாட்சியா் ஜெயபிரகாசம் மேற்பாா்வையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் சகாய பிரான்சிஸ் தலைமை வகித்தாா். இதில் திருவெறும்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 220 முதல் நிலை மீட்பு பணியாளா்களுக்கு பேரிடா் கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, விபத்தில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து பேரிடா் மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நிகழ்வில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரா்கள், வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.