தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பாவூா்சத்திரத்தில் தீ பற்றிய பைக் சேதமின்றி மீட்பு

News image

பைக்கில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன்.

Updated On :15 பிப்ரவரி 2026, 8:43 pm

பாவூா்சத்திரத்தில், திருநெல்வேலி தென்காசி நான்குவழிச் சாலைஅருகே செல்வம் என்பவா் பழைய பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சுமாா் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பைக்கை இயக்கியபோது, திடீரென தீ பற்றியது.

அப்போது அந்த வழியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு பணிக்குச் சென்ற சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு, அருகேயுள்ள கடையில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தாா். இதனால் பைக் சேதமின்றி மீட்கப்பட்டது. தீயணைப்பு அலுவலரின் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.