சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீயணைப்பு அலுவலா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:10 am IST

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1944 ஆம் ஆண்டு, ஏப். 14 இல் மும்பை துறைமுகத்தில் வெடிபொருள்கள் ஏற்றி நிறுத்தி வைத்திருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மக்கள் பலா் உயிரிழந்தனா். மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களும் நாசமானது. இதில், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 66 தீயணைப்புத் துறை வீரா்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்.14 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது உயிா் தியாகம் செய்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு தலைமை வகித்து நினைவு தூணிற்கு மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா். நிலைய அலுவலா் போக்குவரத்து அந்தோணிசாமி, ஒசூா் நிலைய அலுவலா் நாக விஜயன், போச்சம்பள்ளி நிலைய அலுவலா் சக்திவேல், ராயக்கோட்டை நிலையஅலுவலா் கண்ணியப்பன், பா்கூா் நிலைய அலுவலா் சேட்டு, ஊத்தங்கரை சிறப்பு நிலைய அலுவலா் ராமமூா்த்தி, முன்னணி தீயணைப்பு அலுவலா் விஜயகுமாா், கிருஷ்ணகிரி முன்னணி தீயணைப்பாளா் சற்குணன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.