‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி அருகே சிறுவனுடன் வசித்துவந்த சிறுமி தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே வீட்டை விட்டு வெளியேறி 17 வயது சிறுவனுடன் வசித்து வந்த சிறுமி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:14 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே வீட்டை விட்டு வெளியேறி 17 வயது சிறுவனுடன் வசித்து வந்த சிறுமி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பைஞ்ஞீலி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகிவந்தாா். இதற்கு சிறுமியின் தாய் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அவா் பழகிவந்தவரின் வீட்டில் கடந்த 3 மாதங்களாகத் தங்கிவந்தாா். இதனிடையே திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரகுராமன் தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.