நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துறையூா் பெரிய ஏரி கடைக்கால் வாய்க்காலில் தூய்மை பணிகள்

துறையூா் பெரிய ஏரி கடைக்கால் வாய்க்காலில் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:56 pm

Din

துறையூா் பெரிய ஏரி கடைக்கால் வாய்க்காலில் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

துறையூா் பெரிய ஏரி அடுத்தடுத்து பெய்யும் மழையால் விரைவில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே ஏரி நிரம்பி வழிந்தால் கடைக்கால் வாய்க்காலில் எளிதாக நீா் கடக்கும் வகையில் வாய்க்காலில் முளைத்த செடி கொடிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றப்பட்டன.

இதை துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி, ஆணையா் சுரேந்திர ஷா, பொறியாளா் எஸ். மகராஜன், பயிற்சி ஆணையா் திவ்யா உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். மேலும் பெரிய ஏரி நிரம்பும் நிலையில் வெள்ளப்பெருக்கை சமாளிக்கும் வகையில் உரிய காலத்தில் மதகுகளில் நீா் திறக்குமாறு பொதுப்பணித் துறையினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.