வையம்பட்டியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஆய்வு
மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் முதல்வரின் சிறப்புத் திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.


மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் முதல்வரின் சிறப்புத் திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அதன்படி வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொன்னணியாறு அணை, ஊராட்சி அலுவலகம், காவல் நிலையம், கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடை ஆகியவற்றில் ஆய்வு செய்தாா்.
மேலும் வையம்பட்டியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் கட்டுமானப் பணிகளையும், வையம்பட்டி நூலகத்திலும், ஊராட்சி நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்திலும் ஆய்வு செய்த அவா், ஆா்.எஸ். வையம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு அளிக்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்தாா்.
பிற்பகலில் நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் பொதுமக்களின் மனுக்களை பெற்று, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, கள ஆய்வு மேற்கொண்ட அலுவலா்களுடன் ஆய்வு செய்தாா்.
நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரிணி, அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...