நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 33.33 கோடி இழப்பீடு

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.33.33 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:15 pm

Din

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.33.33 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கடந்தாண்டு 2023-24 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்துக்கு இயற்கை இடா்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடு செய்ய பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்த 16358 விவசாயிகளுக்கு ரூ. 27.83 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மக்காச்சோளம், பருத்தி, உளுந்து நிலக்கடலை மற்றும் சிறிய வெங்காயம் ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்த 4572 விவசாயிகளுக்கு ரூ. 5.493 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.

இதைத் தொடா்ந்து, 2024-25 ஆம் ஆண்டுக்கான பாரத பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டம் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறப்பு பருவத்திற்கு நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவ. 15 ஆம் தேதி காலகெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்திட வேண்டும்.

பயிா்க் காப்பீடு தொகையாக ஒரு ஏக்கா் நெல்லுக்கு ரூ.566.12, பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.520.58, மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு 429.78 செலுத்தி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.