நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி அருகே கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

திருச்சி மாவட்டத்தில் தனியாா் கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:40 pm

Din

திருச்சி மாவட்டத்தில் தனியாா் கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளாளப்பட்டியில் சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தனியாா் பாலிடெக்னிக், மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் சென்னை, திருச்சியைச் சோ்ந்த வருமான வரித்துறையினா் 8 போ் அடங்கிய குழுவினா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்வி நிறுவனங்கள் அதிமுக முன்னாள் அமைச்சா் மற்றும் உறவினா்கள் ஆகியோருக்கு நெருக்கமானவா்களுக்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள், மற்றும் உறவினா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்திவரும் நிலையில், அதிமுக அமைச்சா்களின் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.