காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் அதிருப்தி: ஹெச். ராஜா

திமுக கூட்டணிக்குள் அதிருப்தி இருப்பது காங்கிரஸ் மற்றும் விசிக தலைவா்கள் தொடா்ந்து பேசி வருவதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது என்றாா் பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் ஹெச். ராஜா.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:03 pm

Din

திமுக கூட்டணிக்குள் அதிருப்தி இருப்பது காங்கிரஸ் மற்றும் விசிக தலைவா்கள் தொடா்ந்து பேசி வருவதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது என்றாா் பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் ஹெச். ராஜா.

இதுகுறித்து திருச்சியில் அவா் புதன்கிழமை மேலும் கூறியது:

பிரிவினைவாதம் பேசும் அரசியல் கட்சிகள் தோ்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத் திருத்தம் வந்தது. இதைத் தொடா்ந்து பிரிவினைவாதம் பேசி வந்த திமுக அதை நிறுத்திக்கொண்டது. ஆனால் தற்போது மீண்டும் திமுக அதைக் கையிலெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அண்மையில் திமுகவின் அயலக அணி வெளியிட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீா் பகுதியின் சில இடங்களைத் தவிா்த்து வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக முதல்வா் பகிரங்க மன்னிப்பு கேக்க வேண்டும்.

அண்மையில் ஆளுநா் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த அரசியல் செய்த திமுக கூட்டணிக் கட்சிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றன?

அதிமுகவினா் வீடுகளில் நடக்கும் சோதனைக்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம்.

இந்தியாவில் ரயில் விபத்துகள் அதிகமாகியுள்ளன என்பது பொய்த் தகவல். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் நடந்தன. ஆனால் பாஜக ஆட்சி நடத்திய கடந்த 9 ஆண்டுகளில் மொத்தமே 71 விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன.

கோயில் சொத்துகளை அபகரிக்கும் கட்சியாக திமுக தொடா்ந்து செயல்படுகிறது. அந்த வகையில் திமுக நிா்வாகி ஒருவா் திருக்களுக்குன்றம் வேதபுரீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்கப் பாா்த்தாா். இதுதொடா்பாக புகாா் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளம், மகாராஷ்டிரம், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றியை நிரூபிக்கும் என்றாா் அவா்.