நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சியில் மழை; வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தநிலையில் வியாழக்கிழமை மாநகரில் மாலை மழை பெய்தது.

News image

திருச்சி தீரன்நகா் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையில் சென்ற வாகன ஓட்டிகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:36 pm

Din

திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தநிலையில் வியாழக்கிழமை மாநகரில் மாலை மழை பெய்தது.

இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகளும், பெற்றோா்களும் குடைகளை பிடித்தபடியே சென்றனா். பணிக்கு சென்று திரும்பிய தொழிலாளா்கள் மழையில் நனையாதபடி ஆங்காங்கே ஒதுங்கி நின்றனா்.

மேலும், சத்திரம் பேருந்துநிலையம், தில்லைநகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கண்டோன்மெண்ட், மத்திய பேருந்துநிலையம், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கிநின்றது.

மேம்பால பணிகளுக்காக மாநகரில் போக்குவரத்து மாற்றம் அமலில் உள்ளதால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் இருந்து வரும் நிலையில், மழை காரணமாகவும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே சென்றனா்.

மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.2 மி.மீ. மழையும், செவ்வாய்க்கிழமை 4.96 மி.மீ., புதன்கிழமை 6.43 மி.மீ. மழை சராசரியாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணி வரை 0.92 மி.மீ மழை பதிவாகியுள்ளது.