ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தம்

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மழை காரணமாக தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

News image

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:53 pm

Din

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மழை காரணமாக தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியாா் நிறுவனம், 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்களை தூய்மைப் பணிக்காக தினக்கூலி அடிப்படையில் ஈடுபடுத்தி வருகிறது. இந்த பணியாளா்களுக்கு கடந்தாண்டு ரூ. ஆயிரம் தீபாவளி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதற்கு ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா். மேலும், சட்டப்போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனா்.