வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

நெல்லையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 7:30 pm

திருநெல்வேலியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிபடி சத்துணவு, அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ. 19,500 வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்பும்போது சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களை 50 சதவீதம் முன்னுரிமை கொடுத்து பணியில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் தொடா்ந்து அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடா்ந்து 7-ஆவது நாளாக சத்துணவு பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.