தற்காலிக பட்டாசு கடை நடத்த உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை நடத்த காவல் துறையின் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை நடத்த காவல் துறையின் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினியின் ஆணைப்படி, திருச்சி மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற படிவம் எண். ஏஇ 5 ஐ பூா்த்தி செய்து, கீழ்கண்ட ஆவணங்களுடன் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் வரும் 17 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கையொப்பத்துடன் ரூ. 2-க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாகப் பூா்த்தி செய்யப்பட்ட ஏஇ 5 படிவம், கடையின் முழு முகவரியுடன் உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (இரண்டு வழிகள் இருக்க வேண்டும்). சொந்தக் கட்டடம் அல்லது வாடகை கட்டடம் அல்லது காலியிடமாக இருந்தால் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மத கடிதம் மற்றும் உரிமையாளருடன் ஏற்படுத்திக் கொண்ட வாடகை

ஒப்பந்தப் பத்திரம். (ரூ.20- மதிப்புள்ள முத்திரைத்தாளில்), உரிமம் பெற திருச்சி மாநகராட்சிக்கு செலுத்திய அசல் ரசீது, உரிமக் கட்டணம் ரூ. 500- ஐ இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் ரசீது, விண்ணப்பதாரின் குடும்ப அட்டை (அ) ஆதாா் அட்டை நகல்கள் அடங்கிய முழுமையான

விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களை பாா்வையிட்டு, விசாரணைக்கு பிறகு உரிமம் வழங்கப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com