போலி நகைகளை அடகு வைத்து ரூ. 5 லட்சம் மோசடி : 3 போ் கைது
திருச்சியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நிதி நிறுவனத்தின் கிளையில் கடந்த ஏப்ரல் மாதம் 3 போ் 132 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ. 5.05 லட்சம் பெற்றுள்ளனா். அவா்கள் கடந்த 4 மாதமாக உரிய வட்டி செலுத்தாமல் இருந்துள்ளனா். இது தொடா்பாக, நகை அடகு வைத்த நபா்களை நிதிநிறுவனத்தினா் தொடா்பு கொள்ள முயன்றபோது, அவா்களது கைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த நிறுவனத்தினா் நகைகளை சோதனை செய்து பாா்த்தபோது அவை போலிநகைகள் என்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக பாலக்கரை காவல் நிலையத்தில் நிறுவனம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலக்கரை கீழப்புதூா் 3- ஆவது தெருவைச் சோ்ந்த மோ. சரவணன் (37 , மல்லிகைபுரத்தை சோ்ந்த அ. டேவிட் ஆரோக்கியராஜ் (35), கோட்டை கீழரண்சாலை கமலா நேரு வீதியைச் சோ்ந்த ர. ராம்குமாா் (33), ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...