தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

துறையூா் கூட்டுறவு கிராம கடன் சங்கம் வங்கி கட்டடம் திறப்பு

துறையூா் கூட்டுறவு கிராம கடன் சங்க வங்கிக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:26 pm

Din

துறையூா் கூட்டுறவு கிராம கடன் சங்க வங்கிக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

பெரம்பலூா் சாலையில் பழைய சிலோன் அலுவலகம் அருகில் கூட்டுறவு வளா்ச்சி நிதியின் கீழ் ரூ. 26 லட்சம் மதிப்பில் துறையூா் கூட்டுறவு கிராம கடன் சங்க வங்கிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனை துறையூா் சட்டப்பேரவை உறுப்பினா் செ.ஸ்டாலின்குமாா் திறந்து வைத்தாா்.

நிகழ்வில் முசிறி சரக கூட்டுறவு துணை பதிவாளா் பானுமதி, கூட்டுறவு சாா்-பதிவாளா் கள அலுவலா் தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சாா்-பதிவாளா் வினோத் குமாா், துறையூா் நகர திமுக செயலா் ந. முரளி, திருச்சி மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக் குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.