திருச்சியில் மீன், இறைச்சி கடைகள் செயல்பட இடைக்காலத் தடை
திருச்சி காந்திச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடப்பட்ட ஏலத்தை செயல்படுத்த நீதிமன்றம் வியாழக்கிழமை இடைகால தடைவிதித்துள்ளது.


திருச்சி காந்திச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடப்பட்ட ஏலத்தை செயல்படுத்த நீதிமன்றம் வியாழக்கிழமை இடைகால தடைவிதித்துள்ளது.
திருச்சி காந்திச்சந்தை அருகே செயல்பட்டு வந்த இறைச்சி, மீன், கருவாட்டு கடைகள் அடங்கிய சந்தையை இடித்து விட்டு ரூ. 13 கோடியில் புதிய மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் (அங்காடிகள்) அடங்கிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் கீழ் மற்றும் முதல் தளத்திலும் மொத்தம் 148 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள கடைகளை ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒப்பந்த அடிப்படையில் ஏலம் விடப்பட்டது.
இதில் 61 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடைபெற்றுள்ளது. ஆனால், ஏலத்தில் சில முறைகேடுகள் நடந்ததாகவும், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லையெனவும் வியாபாரிகள் தரப்பில் புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், திருச்சி வரகனேரி பகுதியை சோ்ந்த கனி என்ற வியாபாரி, கடைகளுக்கு விடப்பட்ட ஏலத்தை ரத்துசெய்ய வேண்டும் என திருச்சி 2-ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அந்த மனுவில் திருச்சி காந்திசந்தை மீன் மற்றும் இறைச்சி அங்காடிகள் அமைந்துள்ள வணிக வளாகத்தில், முறைப்படி ஏலம் நடத்தப்படவில்லை. எனவே, சட்ட விரோதமாக நடைபெற்ற அந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி பிரபுசங்கா், மனுமீது முகாந்திரம் இருப்பதால், மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு ஆகஸ்ட் 23- ஆம் தேதி விட ப்பட்ட ஏலத்தை செயல்படுத்த செப்டம்பா் 19-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இது தொடா்பாக விசாரணை செப்.14 ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டாா்.
விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருந்த வணிக வளாகம் செயல்பட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...