திருச்சி
மண்ணச்சநல்லூரில் செப்.21-இல் எரிவாயு குறைதீா்க்கும் கூட்டம்
மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (செப்.21) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (செப்.21) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மண்ணச்சநல்லூா் வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில், மண்ணச்சநல்லூா் வட்டத்திலுள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா் பங்கேற்கின்றனா்.
எனவே, மண்ணச்சநல்லூா் வட்ட அனைத்து எரிவாயு நுகா்வோரும் இக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிலிண்டா் விநியோக குறைகள் தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.