பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்சி விமான நிலையத்துக்கு கூடுதல் நகரப் பேருந்துச் சேவை: நாளொன்றுக்கு 22 நடைகள்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துச் சேவை நாளொன்றுக்கு 22 நடைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
திருச்சி விமான நிலையத்திற்க்கு வியாழக்கிழமை வந்த நகரப் பேருந்து.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:31 pm

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துச் சேவை நாளொன்றுக்கு 22 நடைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம், கடந்த ஜூன் 11- ஆம் தேதி திறக்கப்பட்டபோதே, பழைய முனையத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், குறிப்பாக திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானநிலையப் பேருந்து நிறுத்தப் பகுதியிலிருந்து விமான நிலையத்துக்குள் செல்வதற்கு 2 கி.மீ. க்கு மேல் உள்ளதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து அமைச்சா் கே.என். நேரு உறுதியளித்தபடி கடந்த மாதம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் புதிய விமான முனையத்துக்கு பேருந்துச் சேவை தொடங்கியது. இந்நிலையில் இச் சேவையின் நிறை, குறைகள் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், விமான நிலையத்துக்கான பேருந்துச் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு நாளொன்றுக்கு 6 நடைகளாக அளிக்கப்பட்ட சேவையானது தற்போது, கூடுதலாக 16 நடைகள் சோ்க்கப்பட்டு 22 நடைகள் என்ற வகையில் இயக்கப்படுகிறது.

மேலும், புதிய 16 நடைகளும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பேருந்து நிலையத்துக்கு சென்று வரும் வகையில் இயக்கப்படுகிறது. இதில் 4 நடைகள் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தில்லைநகா், நீதிமன்றம் வழியாகச் சென்று வரும் வகையிலும் இயக்கப்படுகிறது. இரவு நேரத்திலும் விமான நிலையத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையத்துக்கான சேவை உள்ளது.