ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போதைப் பொருள்கள் நிறைந்த மாநிலமாகிவிட்டது தமிழகம் : எடப்பாடி கே. பழனிசாமி

தமிழகம் போதைப் பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது என அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

News image
முசிறியில் உள்ள எம்ஐடி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கூட்டரங்கை வியாழக்கிழமை திறந்துவைத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கே. சண்முகம், எம்ஐடி கல்விக் குழுமங்களின் தலைவா் ட
Updated On :19 செப்டம்பர் 2024, 10:20 pm

Din

தமிழகம் போதைப் பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது என அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், முசிறியிலுள்ள எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆயிரம் போ் அமரும் வகையில் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய ஸ்பெக்ட்ரா என்னும் நவீன கூட்டரங்கத்தை வியாழக்கிழமை திறந்துவைத்து அவா் மேலும் பேசியது:

அதிமுக ஆட்சியில் வேளாண்மைத் துறைக்கும், விவசாயிகள் நலனுக்காகவும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 2 முறை வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி இலவச மும்முனை மின்சாரமும் வழங்கப்பட்டது.

ஆனால், வீட்டுக்கு வீடு காய்கனி தோட்டம் என்ற திட்டத்தை ஆட்சி மாற்றத்தால் செயல்படுத்த முடியவில்லை. அடுத்த முறை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநிலத்தில் வேளாண்மையை மேம்படுத்த புதிய நீரேற்றுத் திட்டங்கள் அவசியம். இதேபோல வேளாண் கல்வியும் மிக முக்கியமானது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதற்கு வேளாண் மாணவா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே பெரிய கால்நடைப் பூங்காவுடன் கூடிய ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததால் இந்த மையம் 2 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கிறது.

திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனா். அறிவிக்கப்படாத மின்தடை வாடிக்கையாகிவிட்டது. போதைப் பொருள்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. எனவே, இன்றைய மாணவா்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் கல்வி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உயர வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் எம்ஐடி கல்விக் குழுமங்களின் தலைவா் டி. இளங்கோவன், துணைத் தலைவா் இ. பிரவீன்குமாா், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கே. சண்முகம், கல்லூரி முதல்வா் ரகுசந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, எம்ஐடி கல்விக் குழுமங்களில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளையும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினாா்.