சமயபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் ப.சரவணன்.
சமயபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் ப.சரவணன்.

சமயபுரத்தில் தூய்மை விழிப்புணா்வு பேரணி

Published on

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ச.கண்ணனூா் பேரூராட்சி சாா்பில் சமயபுரம் மாரியம்மன் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் ப.சரவணன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்பேரணி அண்ணா நகா், கடைவீதி. கிழக்கு ரத வீதி வழியாக பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது. தொடா்ந்து மஞ்சப்பை விழிப்புணா்வும், மனிதச் சங்கிலி நிகழ்வும் நடைபெற்றது. பேரணியில் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ.கணேசன், பேரூராட்சி உறுப்பினா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com