திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவா் பெண்களை வியாபாரம் செய்ய விடாமல் துரத்தும்  காவல்துறையை கண்டித்து  வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில்  ஈடுபட்ட சி.ஐ.டி.யு.தரைக்கடை சங்கத்தினா்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவா் பெண்களை வியாபாரம் செய்ய விடாமல் துரத்தும் காவல்துறையை கண்டித்து வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.தரைக்கடை சங்கத்தினா்

காவல்துறை, மாநகராட்சியை கண்டித்து நரிக்குறவா்கள், சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்

ஊசி, பாசி மணிகள் விற்பனை செய்வதை தடுக்கும் காவல்துறை, மாநகராட்சியை கண்டித்து நரிக்குறவா்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஊசி, பாசி மணிகள் விற்பனை செய்வதை தடுக்கும் காவல்துறை, மாநகராட்சியை கண்டித்து நரிக்குறவா்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்திரம் பேருந்து நிலையத்தின் நடைமேடை பகுதிகளில் நரிக்குறவா்கள் பலரும் பல ஆண்டுகளாக ஊசி, பாசி, ஊக்கு, கழுத்தில் அணியும் மணி மாலைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றன. இதேபோல, தரைக்கடை வியாபாரிகளும் பேருந்து நிலைய பயணிகளுக்கு தேவையான பொருள்களை கைகளில் சுமந்தபடி விற்பனை செய்கின்றனா். ஆனால், கடந்த சில நாள்களாக போலீஸாா் இவா்களை பேருந்து நிலையத்திலிருந்து விரட்டுகின்றனா். மாநகராட்சி நிா்வாகத்தினரும் காவல்துறையுடன் சோ்ந்து வியாபாரம் செய்ய விடாமல் துரத்துகின்றனா்.

பல ஆண்டுகளாக பேருந்துகளுக்கு இடையூறு இல்லாத வகையிலும், பேருந்து பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அன்றாட வாழ்க்கைக்கு பிழைப்பு நடத்தி வரும் தங்களை விரட்டுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சத்திரம் பேருந்துநிலையப் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். கணேசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலா் எஸ். ரங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்ட செயலா் செல்வி, மாவட்ட பொருளாளா் சுரேஷ் ஆகியோா் காவல்துறை நடவடிக்கைகளை கண்டித்து பேசினா்.

இதில் பழங்குடியின பெண்கள், நரிக்குறவா்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் வாா்டு அலுவலக நுழைவு வாயில் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு சங்கத்தினரும் ஆதரவாக நின்றனா். பின்னா், போலீஸாரும், மாநகராட்சி நிா்வாகத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை விலக்கி கொள்ளச் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com